தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு


மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.