18th October 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுங்க.. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு…

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை மிகவும் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.

இதனால், வரும் 6ம் தேதி முதல் காய்கறி மற்றும் பல சரக்கு கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை திறக்க தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சென்னையை பாலாஜி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும், அந்த மனுவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட உத்தரவிடக்கோரியும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், இந்தியா முழுவதும் லாக்டவுனை அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page