14th April 2021

தோல்வி அடைந்த மத்திய மற்றும் கேரள அரசு: ராகுல்

பாலக்காடு: பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவதில் மத்திய பா.ஜ., அரசும், கேரள அரசும் தோல்வியை சந்தித்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பாலக்காட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ், மோசமாக உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால், நாட்டின் பொருளாதாரமும், கேரளாவின் பொருளாதாரமும் பலவீனமாக இருக்கிறது. பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு திரும்பி கொண்டு வருவதில், மத்திய பா.ஜ., அரசும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் அரசும் தோல்வி அடைந்துள்ளன.

காங்கிரஸ் ‛நியாய்’ திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்ற போது, பலரும் அதனை விமர்சனம் செய்தனர். வீணான திட்டம் என்றனர். ஆனால், எங்கள் திட்டத்தால், பொருளாதாரம் ஊக்கம் பெறுகிறது என்பதை உணர்ந்து பின்னர் ஏற்று கொண்டனர்.குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் நியாய் திட்டம், பொருளாதாரத்தில் பணத்தை செலுத்தி, சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகபடுத்தலாம். உற்பத்தி துறையையும் ஊக்கப்படுத்த முடியும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts