26th November 2020

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ்க்கு நடைபயணமாக சென்ற ராகுல்காந்தி கைது

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொற்றுநோய் தடுப்பு சட்டப்படி ராகுல், பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.உ.பி.யில் 19 வயது பெண் ஒருவர் கடந்த 14-ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், டெல்லி ஜவஹர்லால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர், சிறப்பு சிகிச்சைக்காக அங்கிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பல் பெண்ணின் பெற்றோரை காவல்துறைக்கு புகார் அளிக்கக்கூடாது என மிரட்டியுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், ஒருவாரம் கழித்து ஹத்ராஸ் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், நீதிபதியிடம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கூறிய நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலைச்சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். காவல்துறை தடையை மீறி சென்றதால் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் ஹத்ராஸ் சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொற்றுநோய் தடுப்பு சட்டப்படி ராகுல், பிரியங்கா காந்தியை அனுமதிக்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

 

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts