22nd October 2021

திமுக, அதிமுக பிரமுகர் வீடுகளில் ரெய்டு

தேனியில் அதிமுக, புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரி அதிகாரிகள், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். தன் தொடர்ச்சியாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, மருமகன் சபரீசனின் அலுவலகம் மற்றும் நண்பர்கள் வீடு, ‘மாஜி’ அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய அமைச்சரவையில் உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியின் டிரைவர் உட்பட, தமிழகம் முழுதும், 28 இடங்களில், வருமான வரி அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிமுகவை சேர்ந்த தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் ரெய்டு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளரான ராமதிலகம் மங்களராமன் என்பவர் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Source : தினமலர்

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page