ரஜினி கட்சி பெயர்: டில்லியில் இன்று பதிவு

ரஜினி கட்சி பெயர், இன்று(டிச.,11) டில்லியில் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்று உள்ளனர்.

கொரோனாவால் முடங்கிய, ரஜினியின் அரசியல் பிரவேசம், தற்போது சூடுபிடித்து உள்ளது. சென்னையில் சில நாட்களாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன், அவர் ஆலோசித்து வருகிறார். அதன் விளைவாக, கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒன்றை, ரஜினி தேர்வு செய்துள்ளார்.

அந்த பெயரை, டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனில், இன்று பதிவு செய்ய உள்ளனர். இதற்காக, வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர், டில்லி சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சி கொடி மற்றும் மாநில நிர்வாகிகளையும் தேர்வு செய்ய உள்ளனர். கட்சி கொடியில், வெள்ளை நிறம் பிரதானமாக இருக்கும் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, கட்சி பெயரை அறிவித்த நாள் முதல், ஒவ்வொரு தெருவிலும், கட்சியின் பெயரை, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, தனி குழுக்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பணம், பதவிக்காக இருப்பவர்களை நீக்க, ரஜினி முடிவெடுத்துள்ளார். அதற்கான பட்டியலும் தயாராக உள்ளது. அதனால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு, தற்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.பாதுகாப்பு போலீசாருக்கு, தினமும் ரஜினி வீட்டில் இருந்தே, உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.

மேலும், யார் யார் வருகின்றனர் என்பதை கண்காணிக்க, கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜெ., மறைவுக்கு பின் களையிழந்த போயஸ் கார்டன், தற்போது ரஜினியால், மீண்டும் பரபரப்பாகி உள்ளது. ரஜினியின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அவரது ரசிகர்கள், யாகம், சிறப்பு பூஜை நடத்தவும், அன்னதானம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில், இன்று காலடிப்பேட்டில் உதவிகள் வழங்கப்பட உள்ளன.

SOURCE

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts