ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ரஜினியின் ஆயுள் அதிகமாகும்; அரசியலில் ஈடுபட்டால் குறையும்!- பிரபல ஜோதிடர் கணிப்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா… இல்லையா என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிடர் சாந்த குமார் கூறியதாவது, ” நான் கடந்த 22 ஆண்டுகளாக ஜாதகம் பார்த்து வருகிறேன். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தேன்.அதன்படி , வரும் டிசம்பர் மாதத்திலிருந்து 3 வருடங்கள் அவருக்கு மிகவும் கெட்டகாலம். எந்த சூழ்நிலையிலும் அவர் அரசியலில் ஈடுபடக்கூடாது. வீட்டிலிருந்தபடி ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த கண்டத்தை தாண்டலாம். அரசியலுக்கு வந்தால் அவர் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் மிகப்பெரிய எதிரி கூட்டமும் அவருக்கு உருவாகும். ரஜினி வீட்டிலிருந்து ஓய்வு எடுத்து ஆன்மிகத்தில் ஈடுபட்டால் இந்த பூமியில் இன்னும் 16 ஆண்டு காலம் அவர் சந்தோஷமாக வாழலாம். ரஜினியின் மகர ராசி, சிம்ம லக்னத்துக்கு டிசம்பர் மாதத்தில் சனி பெயர்ச்சி வருகிறது. இதனால், அவருக்கு உடல் உபாதைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கட்சி ஆரம்பித்து வீதி வீதியாக சென்றால் உடல் நிலை மிகப் பெரிய கேள்விக் குறியாகிவிடும். கடந்த 2010 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது. அதேபோல், 2020 ம் ஆண்டு மீண்டும் ரஜினிக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts