புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கண்டனம் கண்டனம்

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு இந்தியாமுழுவதும் பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வடமாநிலங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ளார்கள். தமிழகத்திலும் வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்கே வேலை பார்த்து வருகிறார்கள். அது போல வடமாநிலங்களிலும் தமிழக தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் சரியாக எடுக்கவில்லை. அதுபோல தமிழக அரசும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய தமிழக தொழிலாளர்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு முறையான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை. அதுபோல தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கும் உரிய ஏற்பாடுகளை முறையாக தமிழக அரசு செய்யவில்லை. வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்தனர். இதனால் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்

தங்கள் ஊரை சென்றடைய ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. தொடர்ந்து கால்நடையாக செல்வதால் ஆங்காங்கே பசி மயக்கத்தில் விழுந்து விடுகிறார்கள் .
உணவு , தண்ணீர் கிடைக்காததால், அந்தந்த ஊரில் பிச்சை எடுத்து வருகிறார்கள் .
பிறகு தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் ,தொடர்ந்து நான்காவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களில் பணியாற்றிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நோய் தொற்று காரணமாக வேலையை இழந்து விட்டனர். இதனால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் கால்நடையாக 1000 கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து சென்று தங்கள் ஊர்களை அடைய வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு இன்றி தவிக்கிறார்கள். இதையெல்லாம் மத்திய அரசாங்கம் சரிவர கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பதற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் அது சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதுபோல பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமும் பல்வேறு உயர் நீதிமன்றங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க பல விதமான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது .

மத்திய , மாநில அரசுகள் அந்த உத்தரவை கடைபிடிக்காமலும் சட்டத்தை சரிவர நிறைவேற்றாமலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி இருப்பதற்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. மத்திய ,மாநில அரசுகளின் அலட்சியம் மனித உரிமை மீறலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பன்னாட்டு சட்டப்படியும் உள்நாட்டு சட்டப்படியும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page