சீர்காழி, பாசன வாய்க்காலில் குழாய் பதித்து சீரமைப்பு


வைத்தீஸ்வரன்கோயில் மருவத்தூர் சுடுகாடு செல்லும் சாலைக்கு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குழாய் அமைக்கப்பட்டது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் – மருவத்தூர் சுடுகாடு செல்லும் சாலையின் குறுக்கே பாசன வாய்க்கால் சென்று வந்தது. இதனால் விவசாய பணி காலத்தில் இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. சாலையின் குறுக்கே செல்லும் பாசன வாய்க்காலில் குழாய் பதித்து தரவேண்டுமென வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மருவத்தூர் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் குகன் ஊழியர்களுடன் மருவத்தூர் சுடுகாடு செல்லும் சாலையை ஆய்வு செய்து உடனடியாக வாய்க்காலில் குழாய் அமைக்க பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து பேரூராட்சி ஊழியர்கள் வாய்க்காலில் குழாய் அமைத்து கொடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
SOURCE : Dhinakaran