40 சதவீத சில்லறை வர்த்தக பங்குகளை அமேசானுக்கு விற்க ரிலையன்ஸ் முடிவு


ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது நடந்தால் ரிலையன்சின் சில்லறை வர்த்தகத்தில் சுமார் 40 சதவிகிதம் வரை அமேசானின் கைகளுக்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு ஏற்கனவே ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ரிலையன்சிடம் இருந்து இதே மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளன.நாடு முழுதும் சுமார் 12 ஆயிரம் சில்லறை வர்த்தக கடைகளை நடத்தும் ரிலையன்ஸ், தொழில்முறை போட்டியாளரான ஃபியூச்சர் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவை சென்ற மாதம் வாங்கியது.சந்தை மதிப்பில் சுமார் 15 லட்சம் கோடியை எட்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் ரிலையன்ஸ் இன்று எட்டியது.