மயிலாடுதுறையில் இறந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட வருவாய் அலுவலரிடம் திமுக மனு


மயிலாடுதுறையில் இறந்த வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட வருவாய் அலுவலர் இந்து மதியிடம் திமுகவினர் மனுவை வழங்கினார். பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் இறந்த வாக்காளர்களை பட்டியலில் நீக்க மனுவும், பட்டியலும் திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராம .சேயோன் முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய கழக செயலாளர் அப்துல் மாலிக், பிரபாகரன், கழக வழக்கறிஞர் அறிவொளி, மாவட்ட பிரதிநிதி ஈச்சங்குடி இளங்கோவன், மாவட்ட தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதார் ஆகியோர், மாவட்ட வருவாய் அலுவலர் இந்து மதியிடம் திமுகவினர் மனுவை வழங்கினார்.