தேர்தல் ஆணையருக்கு மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ,.ஜெகவீரபாண்டியன்,கோரிக்கை கடிதம்


தேர்தல் வாக்காளர் பட்டியலில் காலக்கெடு கொடுத்து தேர்தல்ஆணையம் சேர்த்தல், நீக்கல், திருத்தல் விண்ணப்பங்களை பெற்று வாக்காளர் வரைவுப் பட்டியலில் இருந்து புதிய வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலை தயாரித்து அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு வழங்கி வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கிட விண்ணப்பம் பெற்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமானால் தற்பொழுது இந்த கிராம நிர்வாக அலுவலரிடம் VAO இறப்புச் சான்றிதழ் பெற்று வந்து அதை சம்பந்தப்பட்ட, பிரதான கட்சிகளின் முகவர்கள் ஒப்புக்கொண்டு,பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதாக கூறி பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசரகதியில் கொடுக்கும் பொழுது இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இங்கே மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெறுகிறது இது மிகவும் வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாத பட்டியல் வருவதால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் இறந்தவர்கள் பெயரிலேயே வாக்களிக்கப்பட்ட இயற்கை நீதிக்கு எதிராகவும் இருக்கிறது. இந்த நடைமுறையால் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது கலவரங்கள் ஏற்பட காரணமாக இது அமைகிறது. இப்படிப்பட்ட நடைமுறை ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை குறைக்கிறது.
ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் ஒன்றான தேர்தல் ஆணையம் இது குறித்து தனி கவனம் செலுத்திட வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு வரம்பில்லா வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. இனி வரும் காலங்களிலாவது இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க ரிசர்வ் வங்கி நிதி பரிவர்த்தனையில் எல்லா வங்கிகளிலும் உள்ள பண பரிவர்த்தனையை கட்டுப் படுத்தும் முறையினை போல வங்கிகளில் இந்தப் பரிவர்த்தனை செய்தாலும் வாடிக்கையாளர்களின் கைப்பேசிக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படுகிறது.
அதற்கென்று தனி மென்பொருளை சாப்ட்வேர்ரை ரிசர்வ் வங்கி உருவாக்கி திறம்பட செயல் படுத்துகிறது. ஒரு பான் கார்டு கணக்கு வைத்திருந்தால் அவர் எத்தனை வங்கியில் எந்த வரவு செலவு செய்தாலும் உடனுக்குடன் விவரங்களை சேகரிக்க முழுவதுமாக முடிவது போல தேர்தல் ஆணையம் புதியதாக இதற்கென்று ஒரு மென்பொருளை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இதனுடன் கிராம நிர்வாக அலுவலர், தாலுகா, நகராட்சி போன்ற மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் தொடர்புடைய அனைத்து தேர்தல் மையங்களிலும் இணைத்திட வேண்டும்.
இறப்பு சான்று எங்கு பதிவு செய்யப்படுகிறதோ அப்பகுதியில் இருந்து இது தொடர்புடைய அனைத்து அதிகார மையங்களுக்கும் தகவல் குறுஞ்செய்தி சென்று சேர்ந்து உடனடியாக தானாகவே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய புதிய மென்பொருளை தேர்தல் ஆணையம் தயார் செய்து நடைமுறைப் படுத்த வேண்டும். மேலும் ஒரே நபரின் பெயர் மூன்று வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதால் ஒரே மூன்று முறை வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கிறது. .எதிர் வரும் காலங்களில் பணவிரயம் மற்றும் கால விரயம் தவிர்க்கப்பட்டு 100% உண்மையான வாக்காளர்பட்டியல் வெளிவர வழிவகை ஏற்படும். மேற்படி முறையை நடைமுறையை பின்பற்றி முறையான தேர்தல் நடைபெற தேர்தல் ஆணையம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் இதுதொடர்பான தேர்தல் ஆணையம் எடுக்கின்ற நடவடிக்கை விவரங்களையும் எனக்கு தெரியப்படுத்தவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.