28th November 2020

மயிலாடுதுறையில், இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க கூடாது மனித நேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீர்மானம்

இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க கூடாது என்று மனித நேய ஜனநாயக கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சங்கை தாஜுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜகான் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜகான், மிஸ்பாஹுதீன், அஜ்மல் உசேன், அசேன் அலி, முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் தைக்கால் ஷாஜகான் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றுப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உல் ஐடா ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்வதற்கு கண்டனம் தெரிவிப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களில், விவசாய பிரதிகளும், மாநில அரசுகளும் எதிர் கட்சிகளும் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உடனடியாக திருத்த வேண்டும். தமிழக அரசின் பள்ளிகளில் கட்டாய இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க கூடாது. இரு மொழி கொள்கைகளில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

SOURCE : Dhinathanthi

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts