25th February 2021

ரூ.1.01 லட்சம் கோடியை திரும்ப அளித்தது வருமான வரித்துறை

வருமான வரி செலுத்திய 27.55 லட்சம் பேருக்கு கடந்த 5 மாதங்களில் ரூ.1.01 லட்சம் கோடியை திரும்ப அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரை வரி செலுத்திய 27.55 லட்சம் பேருக்கு ரூ.1,01,308 கோடிக்கும் அதிகமான தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.30,768 கோடியானது வருமான வரி செலுத்திய 25,83,507 தனிநபா்களுக்கும், ரூ.70,540 கோடியானது 1,71,155 பெருநிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், வருமான வரி செலுத்தியோருக்கு அது தொடா்பான சேவைகளை வழங்குவதில் எந்தவித இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.இத்தகைய இக்கட்டான சூழலில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள வருமான வரியை திரும்ப அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

Leave a Reply