இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்! நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்!

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த்(54) நெஞ்சுவலி காரணமாக இன்று(ஏப்., 30) அதிகாலை உயிரிழந்தார்.
2005ல் ஸ்ரீகாந்த் நடித்த கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவற்றில் சூர்யாவை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கி உள்ளார். கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் காலமானார். அந்த சோகத்தில் இருந்தே திரையுலகம் மீளாத நிலையில் அடுத்து கே.வி.ஆனந்தை இழந்திருக்கிறது. கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.வி.ஆனந்த்தின் உடல் அஞ்சலிக்காக சென்னை, அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

Advertisement

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page