29th November 2020

‘இரண்டாம் குத்து’ படம் குறித்து- அமைச்சர் கடம்பூர் ராஜு

ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ்.. இந்நிலையில், அவருடைய அடுத்த படத்தையும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ’இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்பின் பாரதிராஜாவின் ‘டிக் டிக் டிக்’ படத்திலிருந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, பாரதிராஜாவை கேள்வி கேட்டிருந்தார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இதனைத் தொடர்ந்து, இது மேலும் சர்ச்சையானது. இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த படம் குறித்து பேசியுள்ளார். அதில், “தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைச் சீரழிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SOURCE

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts