26th October 2021

சென்னையில் நாகேஷ் பெயரில் சாலை: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்!

சென்னையில் ஒரு சாலைக்கு நாகேஷின் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், சிலை நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காமெடி, குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பால் அசத்தியவர் நாகேஷ். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி காலமானார். இன்று அவருடைய நினைவு நாள். இதனை முன்னிட்டுப் பலரும் நாகேஷ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தனது படங்களில் நாகேஷுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கிய கமல்ஹாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

1958-ல் ‘மனமுள்ள மறுதாரம்’ படத்தில் அறிமுகமாகி 2008-ல் ‘தசாவதாரம்’ வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் ‘நம்மவர்’ திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page