மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் குடிநீர் தேக்கு தொட்டியை அகற்ற கோரி மனு

மயிலாடுதுறை, டவுன் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகாலமாக தண்ணீர் தேக்கு தொட்டி அமைந்துள்ளது. அத்தொட்டி பழுதடைந்து 6 மாதங்கள் ஆகியும் சரியான தீர்வு எடுக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது 5 அடி பூமியில் தொட்டி இறங்கி எந்நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.

இதை தொடர்ந்து அப்பகுதிக்கு புதிய சாலை அமைத்தல் தொடர்பாக அங்கே வந்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் சட்ட மன்ற உறுப்பினரை சந்தித்து உடனடியாக தொட்டியை அகற்றி தருமாறு மனு அளித்தனர்.

மனுவை பெற்ற சட்ட மன்ற உறுப்பினர் “மக்கள் நலனே எனது தொண்டு” என கூறி தொட்டியை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Leave a Reply