மயிலாடுதுறையில் கிராமப்புர இளைஞர்களுக்கான வாழ்வியல் விழிப்புணர்வு பயிற்சி


16.12.2020 சேத்தூர் ஊராட்சி மன்றம் சார்பாக அப்பகுதி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மேம்படுத்தகொள்ள வேண்டிய திறன்கள், மன அழுத்தம் இன்றி வாழுதல் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிகள் உளவியல் ரீதியாக சுமார் 50 மேற்பட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இப்பயிற்சியனை ரேவா சேப்டி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் சி.ஐ.எஸ் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இலவசமாக வழங்கியது. உளவியல் நிபுணர் திரு கே.கண்ணன் பயிற்சி அளித்தார். திரு கவியரசன் அவர்கள் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார். வேலை தேடும் திறன்மிக்க கிராமப்புற இளைஞர்கள் ஒருபுறம் வேலைக்காக நல்ல பணியாளர்களை தேடும் நல்ல நிறுவனங்கள் மறுபுறம் என்ற சூழ்நிலையை மாற்றவும் இன்றைய இளைஞர்கள் கொரோனா காலத்திலிருந்து விடுபட்டு நல்ல எதிர்காலத்தை எதிர்கொள்ள தேவையான திறன்களை மேம்படுத்த வழிகள் மற்றும் சுயவேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்தும் உளவியல் ரீதியாக பரிசோதனை அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டது. சேத்தூர் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. உஷா அவர்கள் தலைமையில் துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு பிரதிநிதிகளும், கிராம பெரியோர்கள் மற்றும் பெற்றோர்களும் இளைஞர்களோடு கலந்து கொண்டு பலன்பெற்றனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாழ்த்துரை வழங்க துணைத்தலைவர் நன்றியுறை வழங்கினார்.