மயிலாடுதுறையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை எஸ்.பவுன்ராஜ் தொடங்கி வைத்தார்


மயிலாடுதுறை, தரங்கபாடி அடுத்த செம்பனார்கோவில் பகுதியில் மூன்று கோடியே எண்பத்தாறு இலட்சம் மதீப்பீட்டில் இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை எம்.எல்.ஏ எஸ்.பவுன்ராஜ் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். காழியப்ப நல்லூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவிற்க்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை சட்ட மன்ற உறுப்பினர் பவுன்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.