3rd December 2020

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை (புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.பிறகு கோவில் ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு பிரசாதம் வழங்கப்படும். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையொட்டி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது.

5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறுகிறது. ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.

SOURCE

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts

Leave a Reply