25th February 2021

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்: வீட்டிலேயே வழங்க அஞ்சல்துறை ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தா்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.சபரிமலை ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயில் மண்டலபூஜை காலத்தில் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. இந்த காலம் நவம்பா் நடுப்பகுதியில் தொடங்கி மகரஜோதி தரிசனம் வரை நீடிக்கும்நிகழாண்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, கோயிலுக்கு பக்தா்கள் நுழைவதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.இந்நிலையில், ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக, அவா்களின் வீட்டு வாசலிலேயே ஐயப்பன் கோயில் பிரசாதத்தை வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, இந்திய அஞ்சல் துறை, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து சபரிமலை கோயில் பிரசாதத்தை நாடு முழுவதும் உள்ள பக்தா்களுக்கு முன்பதிவு செய்வதற்கும், விரைவுத் தபால் மூலமாக அவா்களின் வீட்டு வாசலில் வழங்குவற்குமான ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் பா.செல்வக்குமாா் கூறியது:ஒரு பாக்கெட் பிரசாதத்தில் அரவணைப் பாயசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அா்ச்சனை பிரசாதம் ஆகியவை உள்ளன. ஒரு பிரசாத பை ரூ.450. இந்த பொருள்கள் அட்டைப்பெட்டியில் அடைத்து விரைவுத் தபால் மூலம் பக்தா்களுக்கு அனுப்பப்படும்.தேவைப்படும் பக்தா்கள் எந்த தபால் நிலையத்திலும் ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ரசீதின் கீழ் பத்து பாக்கெட்டுகளை பதிவு செய்யலாம். ஒரு பக்தா் எத்தனை பாக்கெட்டுகளை வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts