24th November 2020

தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்.

 

தீபாவளி கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்.
மாவட்ட தீயனைப்பு  மீட்புப் பணிகள் துறை அலுவலர் அவர்களின் செய்திக்குறிப்பு

தமிழகம் முழுவதும் தீபாவளி திருநாளை வருகின்ற 27.10.2019 அன்று மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ‘‘மாநிலத்தின் பாதுகாப்பானது இவ்வரசாங்கத்தின் கரங்களின் கீழ் நிறைவான பாதுகாப்பாக இருக்கிறது” என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க. பட்டாசு வெடிக்கும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை ஏற்படுத்தி இருக்கிறது.

தீயணைப்பு ஊர்திகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களிலுள்ள அவசரகால மீட்பு உபகரணங்கள் எல்லாம் 24ஒ7 என எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது மட்டுமின்றி. விபத்து நடக்கும் இடத்திற்கு எவ்வித காலதாமதமுமின்றி விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇ பட்டாசு வெடிப்பதால் தீவிபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிப்பதற்கு வசதியாக நாகப்பட்டினம் வாட்டத்தில் பொருத்தவரை கீழ்கண்ட தொலைபேசி எண்கள் எந்நேரமும் இயங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

101 மற்றும் உதவி மாவட்ட அலுவலர், நிலைய அலுவலர் தொலைபேசி மற்றும் கைபேசி எண்களையும்; தொடர்பு கொள்ளலாம்-
1. ஊதவி மாவட்ட அலுவலர்          04365 – 249409               94450 – 86429
2. நாகப்பட்டினம்                               04365 – 248101                94450 – 86430
3. மயிலாடுதுறை                               04364 – 222101               94450 – 86433
4. சீர்காழி                                              04364 – 270101               94450 – 86435
5. தரங்கம்பாடி                                   04364 – 289101               94450 – 86436
6. வேதாரண்யம்                                 04369 – 250101              94450 – 86437
7. கீழ்வேளுர்                                        04366 – 275101               94450 – 86431
8. குத்தாலம்                                         04364 – 234101               94450 – 86432
9. வேளாங்கண்ணி                           04365 – 263101               94450 – 86438
10. பூம்புகார்                                        04364 – 260101               94450 – 86434
11. தலைஞாயிறு                                04369 – 234101               94450 – 86410
12. மருத்துர்                                           இல்லை                          94450 – 86411
13. திருமருகல்                                     04366 – 270101               94450 – 86430

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5728 பட்டாசு கடைகளுக்கு தடையின்மைச் சான்றுகளை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வழங்கி இருக்கிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 223 கடைகளுக்கு தடையிண்மை சான்று வழங்கப்பட்டுள்ளது தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மற்ற அரசு துறைகளுடன் முன்கூட்டியே ஒருங்கிணைந்து செயலாற்றி தமிழ்நாடு முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளது, மத்திய மண்டலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 123 பிரச்சாரங்கள் இதுவறை செய்யப்பட்டுள்ளது நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி வேதாரண்யம் போன்ற ஊர்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டில் மாவட்டத்திலுள்ள 12 தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் நிலையங்களில் ஊர்திகள் அதன் முழுவினரோடும், செயற்கருவிகளோடும் சுமார் 185 அலுவலர் மற்றும் பணியாளர்களுடன் தொடர்ந்து விழிப்புடன் பாதுகாப்பு பணி மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். தீபாவளி முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக தீபாவளி பண்டிகையின் போது நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் மற்றும் மயிலாடுதுறை மணிக்குண்டு அருகில் தீயணைப்பு ஊர்திகள் தயார் நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மற்றும் வழிப்புணர்வு பிரச்சாரங்கள் முலம் தீயணைப்பு மற்றும் மீட்ப்பணிகள் துறை விபத்துகளை வெகுவாக குறைத்து வருகிறது, இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை “விபத்தில்லாத பாதுகாப்பான பண்டிகையாக” கொண்டாடுவதற்கு ஏதுவாக கீழ்கண்ட நடைமுறைகளை பட்டாசு வெடிக்கும் போது தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.நீதிமன்ற உத்தரவின்படியும் மற்றும் தமிழக அரசு அறிவிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

வழிபாட்டு தளங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், எரிவாயு குடோன் மற்றும் குழசைப்பகுதிகள் ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிக்ககூடாது, பட்டாசுகளை முறையாக தீ உரிமம் பெற்ற கடைகளிலேயே வாங்க வேண்டும்.

பட்டாசுபெட்டியில் அச்சடிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனமுடன் படித்து பார்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் பொழுது இறுக்கமாக பருத்தி ஆடைகள். பாதுகாப்புக்கு காலணிகள் அணிந்து கொள்ள வேண்டும்,பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி நீர் மற்றும் மணல் ஆகியவற்றை பக்கத்தில் பாதுகாப்பிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்,
பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்,திறந்த வெளியில் பட்டாசு வெடியுங்கள்.ராக்கெட்டுகள் பற்றவைக்கும் பொழுது ஜன்னல் அல்லது கதவு போன்ற எந்தவொரு தொடக்கத்தையும் எதிர்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீண்ட ஊதுவர்த்திகளை கொண்டு பட்டாசுகளை வெடியுங்கள் அவ்வாறு செய்யும் பொழுது முகத்தினை பாதுகாப்பாக வேறுபக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.

ஆடையில் தீபற்றினால் ஓடாதீர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் நின்று கீழே படுத்து உருளுங்கள். எதிர்பாராது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அத்தீக்காயத்தின் மீது தொடர்ந்து குறிர்ந்த நீரை ஊற்றி தீக்காயத்தின் தீ விரத்தை குறைக்கலாம், அதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவ உதவியை நாடலாம்.எரிந்து முடிந்த பட்டாசு கம்பி மத்தாப்பு ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ அழுத்திட வேண்டும்.

இந்த அறிவுரைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்குமாறும் பட்டாசு வெடிக்கும் பொழுது முதியவர்கள். குழந்தைகள். பெண்கள். நோயாளிகள் மற்றும் விலங்குகளை மனதில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிகவும் நேர்த்;தியான விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் “விபத்தில்லாத மற்றும் பாதுகாப்பான” தீபாவளி கொண்டாட்டத்திற்கு நீதிமனறம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடித்து தீபாவளியை மகிழ்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடிட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வாழ்த்துகிறது.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்

Leave a Reply