25th February 2021

சாகித்ய அகடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு சொந்த ஊரான மயிலாடுதுறையில் அஞ்சலி

புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி ஆலோசனைக் குழு உறுப்பினரும், சாகித்ய விருது பெற்றவருமான சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

பிறந்த மண்ணின் மீது மிகுந்த பற்று கொண்ட சா.கந்தசாமி, சமூகத்தைப் பாதிக்கும் தீங்குகளை எதிர்க்கும் ஆயுதமாக எழுத்தைப் பயன்படுத்திய அவர், தேசிய அளவில் தமிழ் இலக்கியத்தின் முகங்களில் ஒருவராகவும் பல்வேறு மாநில மொழி படைப்பாளர்கள் மதிக்கத்தக்க இலக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்தவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சா.கந்தசாமி மறைவுக்கு அவரது சொந்த ஊரான மயிலாடுதுறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு எழுத்தாளரும், காவிரி அமைப்பின் தலைவருமான கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவர் பவுல்ராஜ், அறம்செய் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், அறம்செய் அறக்கட்டளை செயலாளர் கணேசன் செம்பனார்கோவில் டெம்பிள்சிட்டி தலைவர் குணசீலன், காவிரி அமைப்பின் நிர்வாகிகள் அகஸ்டின் விஜய், சுந்தர், கவி.மோகன், கவி.கார்த்தி, கோபு, கார்த்திக் ஆண்டனி, யோகேஸ்வரன், சூர்யா, அறம்செய் அப்துல்லா மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

Leave a Reply