3rd December 2020

திண்டுக்கல் சிறுமி படுகொலையை கண்டித்து மயிலாடுதுறை பகுதிகளில் சலூன் கடைகள்அடைப்பு

திண்டுக்கல் சிறுமி படுகொலையை கண்டித்து மயிலாடுதுறை பகுதிகளில் சலூன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் 09.10.2020 அன்று அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நகை மாவட்டம் தரங்கம்பாடி, பொறையர், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் ஏற்பட்ட அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதனை தொடர்ந்து சங்கத்தை சேர்ந்த உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தரங்கம்பாடி தாசில்தார் கோமதியிடம் கோரிக்கைகைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இதேபோல் குத்தாலம் ஒன்றிய முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் குத்தாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தாலம், சேத்திரபாலபுரம், ஆலங்குடி, அஞ்சாறுவார்த்தலை, கோமல், தேரழுந்தூர், எஎஸ்.புதூர், ஸ்ரீ கண்டபுரம், திருவாடுதுறை, திருவாலங்காடு பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடை பெற்றது. மேலும் குத்தாலம் பகுதி சலூன் கடை உரிமலையாளார்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts