27th November 2020

சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மலர்தூவி மரியாதை

குஜராத்தில் ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்கு தொடங்கப்படும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலை வளர்க்கும் என தெரிவித்துள்ளார்.இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கவடியா பகுதியில் நர்மதை ஆற்றில் அமைந்துள்ள ஒற்றுமை சிலை என்று பெயரிடப்பட்டுள்ள பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ஒற்றுமை தின பேரணியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை விரல்களால் தாளம்போட்டபடியே பிரதமர் ரசித்தார்.விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்திய, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு புகழாரம் சூட்டினார். அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்டு கவடியாவில் நர்மதை ஆற்றில் இறங்கும் கடல் விமான சேவை சுற்றுலாத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் என்றார்.
புல்வாமா தாக்குதல் நடந்தபோது சிலர் அதற்காக வருந்தாமல், அதைவைத்து அரசியல் செய்து கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டினார். தேசத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என அவர்களை கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

SOURCE

More News

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts