எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்க்கு கலைத்தாய்அறக்கட்டளை சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


26-9-2020 நேற்று பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்க்கு “கலைத்தாய் அறக்கட்டளை மற்றும் மயிலாடுதுறைமாவட்ட நாட்டுப்புறகலைஞர்கள் நலசங்கம் மற்றும் ரசிகர்களின் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சமூகஆர்வலர் அப்பர்சுந்தரம்,கலைஆர்வலர் குருமூர்த்தி, மேடைபாடகர் ராஜமாணிக்கம், மனிதநேயர் ஜோதிராஜன், தினமனி கிருஷ்ணகுமார், ஏ.பி.ஜே அப்துல்கலாம் அறக்கட்டளை நிறவனர் அசோக்குமார் மற்றும் அனைத்து பத்திரிக்கை நண்பர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்யப்பட்டது. அவரது பாடல்களை பாடி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது