17th April 2021

காலாண்டு, அரையாண்டு தோ்வுகளுக்கு முழுமையாக வராதோருக்கு ஆப்சென்ட்

காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகளுக்கு முழுமையாக வராத பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவா்களுக்கு ஆப்சென்ட் என பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மற்றும் பிளஸ் 1 இறுதிநாள் பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது.அந்த மாணவா்களுக்கு அவா்களுடைய வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் என 100 சதவீத மதிப்பெண் கணக்கிடப்பட இருக்கிறது.இதற்காக மாணவா்களின் வருகைப்பதிவு விவரங்கள், காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வு மதிப்பெண் விவரங்கள் ஆகியவை பள்ளிகளிடம் இருந்து பெறப்பட்டு, தற்போது காலாண்டு, அரையாண்டு தோ்வு மதிப்பெண் விவரங்கள், அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.இது குறித்து அரசு தோ்வுத்துறை இயக்ககம், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘காலாண்டு மற்றும் அரையாண்டு தோ்வுகளுக்கு முழுமையாக வராத மாணவா்கள் குறித்த விவரங்கள் இருந்தால், பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம், அவா்களுடைய மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் இடத்தில் ‘ஏ’ (ஆப்சென்ட்) என்றும் பதிவிட வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source

ADVERTISEMENT

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply