27th November 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் முடிவு பெறும் நிலையில், அடுத்த மாதம் ஊரடங்கு குறித்தும் தளர்வுகள் குறித்தும் தமிழக முதல்வர் ஆலோசனை ஈடுபட உள்ளார்.

மேலும், 2020 – 2021 கல்வி கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை இன்னும் தமிழகத்தில் திறக்கவில்லை. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். பள்ளிகள் திறப்பதில் உள்ள சிக்கல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

கோமல் அன்பரசன் ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts