29th November 2020

பள்ளி மாணவி இறப்பில் சந்தேகம்-5 நாட்களுக்குப் பிறகு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருவிளையாட்டம் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவிளையாட்டம் கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் குமுதம். இவர் திருவிளையாட்டம் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆறு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கும் திருமணம் ஆகி உள்ளது. இவரது கடைசி மகள் திவ்யா (15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் .

பள்ளி திறக்கப்படாததால் வீட்டில் உள்ளார் இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த சங்கர் மகன் சிலம்பரசன்(19) என்பவரிடம் திவ்யா(15) பேசிக் கொண்டிருப்பதாகவும் திவ்யாவை கண்டித்து வைத்துக்கொள்ள கூறி சிலம்பரசனின் தம்பி ஸ்டாலின் என்பவர் திவ்யாவின் சகோதரர் சரத்குமாரிடம் கடந்த 27-ஆம் தேதி போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி திவ்யாவின் தாயார் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத போது மதியம் மூன்று மணி அளவில் திவ்யா தூக்கில் தொங்கியதாக தகவல் அறிந்து வந்த திவ்யாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர்.

ஊர் முக்கியஸ்தர்கள் புகார் அளிக்க தேவையில்லை என்று கூறியதால் புகார் அளிக்காமல் 29-ஆம் தேதி அரும்பாக்கம் ஆற்றங்கரை இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும், திவ்யா தற்கொலை செய்வதற்கு முன்பு சிலம்பரசனின் குடும்பத்தினர் திவ்யாவின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு சந்தேகமடைந்த திவ்யாவின் சகோதரர் சரத்குமார் பெரம்பூர் காவல் நிலையத்தில் தன் தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திருவிளையாட்டம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் போனில் தொடர்பு கொண்ட ஒருவர் தான் போலீஸ் பேசுவதாக கூறி இறந்துபோன திவ்யாவின் குடும்பத்தினரிடம் போனை கொடுக்க சொல்லியுள்ளார்.

அதில் போலீஸ் என்று பேசிய நபர் திவ்யாவின் சகோதரியிடம் யாரைக் கேட்டு புகார் கொடுத்தீர்கள் என்றும் புகாரை வாபஸ் பெற வேண்டும் ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர். உடனடியாக பெரம்பூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் உடலை தரங்கம்பாடி வட்டாட்சியர் கோமதி முன்னிலையில் தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் பேரில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts