செம்பனார்கோயில் அருகே மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு

செம்பனார்கோவில் அருகே மாற்றுதிறனாளி மாணவி படிக்கவில்லை என்று கத்தியால் குத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா(8) இவர் இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாமல் இருக்கும் மாற்றுதிறனாளி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற பவித்ரா சரியாக படிக்கவில்லை என்று ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டி கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி பவித்ரா அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தார். மாற்றுதிறனாளியான 3ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

 

SOURCE : https://thaneudagam.com/2019/09/18/செம்பனார்கோயில்-அருகே-மா/

Leave a Reply