செம்பனார்கோவிலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் செம்பனார்கோவில் கீழ முக்கூட்டிலுள்ள அண்ணா திருமண மண்டபத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு கொரோனா நோய் தோற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பேசுகையில் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் உடனடியாக கொரோணா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். செம்பனார்கோவில் ஒன்றியத்தை பொருத்தவரையில் ஆக்கூர், பொறையார் ஆகிய ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

மேலும், செம்பனார்கோவில், கீழையூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் போட விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும், ஊராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து முக்கிய பங்காற்ற வேண்டும்.

தினமும் ஒரு ஊராட்சியில் நடமாடும் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடக்க இருக்கிறது. அந்தந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செவிலியர் பணித்தள பொறுப்பாளர் ஆகியோர் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் 100 நாள் வேலை செய்யும் அனைவரும் கண்டிப்பாக கோரணா தடுப்பூசி இரண்டாவது தவணையும் போட்டுக்கொண்ட பின்பே பணிக்கு அனுமதிக்க வேண்டும். மாநிலத்தில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி கொரோனா நோய் தொற்று இல்லாத முதன்மை தொகுதியாக விளங்க வேண்டும் என்றார்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய குழு துணை தலைவர் மைனர்.பாஸ்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனகர், ஆர்த்தி, வட்டார சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page