செம்பனார்கோவில் டெம்ப்ள் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதிவுயேற்பு விழா


செம்பனார்கோவில் டெம்ப்ள் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா 18.07.2020 சனிக்கிழமை செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் சதிஷ் அவர்கள் தலைமை வகித்தார் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேதுசுப்ரமணியன் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தினார். அதை தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆளுநர் ராமராஜு அவர்கள் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் திருமாவளவன், வட்டார தலைவர் மதிவாணன் மற்றும் மாவட்ட தலைவர் என்.கே.கே.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.