24th November 2020

சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு

சீர்காழியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி.

சீர்காழியில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை ஒட்டி, சாலை பாதுகாப்பு விழுப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சீர்காழி சங்கமம் சேவை சங்கம், சமூஇ மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சாசனத்தலைவர் தில்லை.நடராஜன் தலைமை வகித்தார்..அரிமா சங்க முன்னாள் ஆளுநர் கியான்சந்த்,ஜேசீஸ் முன்னாள் மண்டலத்தலைவர் முத்துராமலிங்கம்,முன்னாள் தலைவர் கனக.கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முரளிதரன் வரவேற்றார். தொடர்ந்து சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற வில்லைகளை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வந்த அனைத்து வாகனங்களுக்கும் மாணவர்கள் கருப்பு வில்லைகளை விளக்குகளில் ஓட்டினார். இதில்,சங்கமம் சேவை நிர்வாகிகள் ராஜேந்திரன் ,வள்ளியப்பன்,வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்..

Leave a Reply