உல்லாச விடுதியாக மாறிவரும் சீர்காழி பழைய வட்டாச்சியர் அலுவலகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள இடிக்கப்பட்ட பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பகலில் சிறுநீர் கழிக்குமிடமாகவும் இரவில் மது, மாதுவுடன் காம காளியாட்டங்கள் செய்யும் விபச்சரா விடுதியாகவும் மாறிவிட்டது. வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் அதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு இதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 183 கோடியை தமிழக அரசு ஒதிக்கீடு செய்தது. இதை தொடர்ந்து வட்டாச்சியர் அலுவலகம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள திருஞான சம்மந்தர் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது . நாகை மாவட்ட கலெக்டரின் அலட்சியத்தின் காரணமாகவும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் கண்டுகொள்ளாத காரணத்தினாலும் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. பழைய வட்டாச்சியர் அலுவலகத்தின் கதவுகள் இடித்து பெயர்க்கப்ட்டதால் திறந்து கிடக்கிறது. இதனால் கடந்த 1 வருட காலமாக இந்த கட்டிடத்தில் உள்ளே சென்று பலர் சிறுநீர் கழித்து வருகிறார்கள். இந்த கட்டிடத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார் பதிவாளர் அலுவலகம், பொது பணித்துறை அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்கள் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வரும் பொதுமக்கள், ஊழியர்கள் பகலில் கட்டிடத்தின் உள்ளே சென்று சிறுநீர் கழித்து வருகிறார்கள்.இரவில் சமூக விரோதிகள் மதுகுடிக்கும் பாராக உபயோகித்து பலர் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தூய்மை இந்திய, திறந்த வெளியல் மலம் ஜலம் கழிக்க கூடாது என கூறி கோடிக்கணக்கான ரூபாய் பிரச்சார விளம்பரத்திற்க்காக செலவு செய்யப்படுகிறது. ஆனால் சீர்காழியில் பழைய அரசு கட்டிடம் கழிப்பிடமாக மாறியுள்ளது கொடுமை. தற்போது புதிய கட்டிடம் கட்டுவதற்க்கான வாய்ப்பு இல்லை என்று தெளிவாக தெரிகிறது. எனவே, தற்சமயம் கட்டிடத்தின் உள்ளே யாரும் செல்லாமல் இருக்க கதவு அமைத்து அடைக்கப்படுமா சீர்காழி வருவாய் துறையினருக்கு இதை யார் எடுத்து சொல்வது.

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts