சீர்காழி, புத்தூர் அரசு கல்லூரியில் ரூ.30லட்சம் செலவில் நுழைவுவாயில் வளைவு, முகப்புசாலை சீர்காழி எம்எல்ஏ திறந்து வைத்தார்


மயிலாடுதுறை, சீர்காழி தாலுக்கா புத்தூர் பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட நுழைவுவாயில் வளைவு மற்றும் முகப்பு சாலை திறப்பு விழா நடைபெற்றது.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் செலவில் புதிதாக கல்லூரி நுழைவுவாயில் வளைவு , முகப்புசாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா கல்லூரி முதல்வர் டி.லெட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிலவளவங்கி தலைவர் கே.எம்.நற்குணன், கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சசிக்குமார், உடற்கல்விஇயக்குனர் டி.பிரபாகரன், பேராசிரியர்கள் திருநாராயணசாமி, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பி.வி.பாரதி புதிய நுழைவுவாயில் மற்றும் கல்வெட்டை திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி செயலாளர் நாகரத்தினம், தொகுதி இணை செயலாளர் ராஜேந்திரன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, மாவட்ட பிரதிநிதி கார்த்தி, வழக்குரைஞர் நெடுஞ்செழியன், அதிமுகவினர்கள் ஆனந்தநடராஜன், சொக்கலிங்கம், கருணாகரன், விக்னேஷ், அலெக்ஸ் மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.