காவேரி துலா கட்டத்தை தூய்மைப்படுத்த நகராட்சி ஆணையரிடம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

துலா கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கங்கை தன்மீது மக்கள் இறக்கி வைத்த பாவத்தைப் போக்குவதற்காக சிவபெருமானிடம் வேண்டிய பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தமிழ்நாட்டில் காவேரி நதியில் புனித நீராடுகின்ற போது, உனது பாவங்கள் தீர்க்கப்படும் என்று சிவபெருமான் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் துலாக்காவிரியில் புனித நீராடுவது மூலம் பாவம் விலகி புண்ணியம் பெறுவதாக ஐதீகம். இந்த ஆண்டு கொரானா காரணமாக துலா உற்சவம் ரத்து செய்யப்பட்டாலும் ,பக்தர்கள் காவிரியில் புனித நீராடுவது தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக காவிரியில் தண்ணீர் குறைந்த காரணத்தினால் குப்பை கூளங்கள் தேங்கி அங்கங்கே அசுத்தமாக இருக்கிறது. அதனை உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் அண்ணாமலை என்கின்ற புவனேஸ்வரனை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அப்போது கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல், ஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜோதிராஜன் ஆகியோர் நேரில்உடன் இருந்தார்கள். ஆணையர் உடனடியாக இரண்டு தினங்களுக்குள் துலாக்கட்ட காவேரியின் அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென்று மயிலாடுதுறை பொதுப்பணித்துறை காவிரி வடிநில வட்ட உதவி பொறியாளர் கண்ணதாசனிடம் நேரில் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் போதிய அளவில் துலா விழாவை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவேரியில் முழு அளவில் தண்ணீர் திறக்கப்படும் என்றும், அது கடைமுழுக்கு, முடவன் முழுக்கு விழாநடைபெறும் வரை முழுமையாக தண்ணீர் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்,

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts