25th February 2021

தெற்கு ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து: 7 மாதத்தில் ரூ.1,167 கோடி வருமானம்

தெற்கு ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து மூலமாக, கடந்த 7 மாதங்களில் ரூ.1,167.57 கோடி வருமானம் கிடைத்துள்ளது.சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில்வே கோட்டங்களில் சரக்கு ரயில்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை 7 மாதங்கள் வரை, சரக்கு ரயில்களில் 14.78 மில்லியன் டன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதன் மூலமாக, ரூ.1,167.57 கோடி தெற்கு ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது.கடந்த ஒரு மாதத்தில், சரக்கு ரயில்கள் மூலமாக 2.09 மில்லியன் டன் சரக்கு ஏற்றிச்செல்லப்பட்டது. இதன்மூலம், ரூ.162.42 கோடி வருவாய் கிடைத்தது. பல்வேறு பொருள்கள் ஏற்றப்பட்டாலும், இந்த மாதத்தில் சில விதிவிலக்குகள் இருந்தன. முதலாவது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு (டி.என்.சி.எஸ்.சி) ஒரே மாதத்தில் மிக அதிக அளவான 2.61 லட்சம் டன் அரிசி மற்றும் நெல் ஏற்றப்பட்டது. இதேபோல, ஆட்டோமொபைல் துறைக்காக, அக்டோபரில் 56 சரக்கு ரயில்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலமாக, ஆட்டோமொபைல் துறைக்காக ஒரே மாதத்தில் அதிக சரக்கு ரயில்களைப் பயன்படுத்தி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் தொழில்துறையைச் சோ்ந்தவா்களுடன் சரக்கு ரயில் போக்குவரத்துக்காக ஆலோசித்து வருகிறது. இதன்காரணமாக, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது என்றனா்.

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts