3rd December 2020

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க ஒருங்கிணைந்த சமூக வலைதள புகார் மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக்கு தெரிவிப்பதற்கு அல்லது புகார் அளிப்பதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சமூக ஊடகங்கள் வாயிலாக பொது மக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சமூக வலைதள புகார் மையத்தை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் பொது மக்களின் தேவையறிந்து இந்த ஒரு ஒருங்கிணைந்த சமூக வலைதள புகார் மையத்தை துவங்கியுள்ளார் இந்த இணைய வழி புகார் மையத்தில் குறிப்பாக பொதுமக்கள் தங்கள் பகுதிகள் நிகழக்கூடிய பொதுவான பிரச்சினைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை தெரிவிக்கலாம். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விபரம் மற்றும் காவலர்களின் எண்ணிக்கைகள், காவல் நிலையங்கள் அமைந்திருக்கக் கூடிய இடம், மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மாவட்ட காவல்துறை குறித்த அனைத்து விதமான தகவல்களும் ஏதுவாக பொதுமக்களுக்கு கிடைக்கும் வண்ணமாக பொது மக்களின் தேவையறிந்து எளிய முறையில் பொதுமக்கள் அணுகும் வகையில் இணையதள சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ளார்கள். மேற்கூறிய ஒருங்கிணைந்த இந்த புகார் மையத்தை பொதுமக்கள் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எந்த நேரத்திலும் இந்த ஒருங்கிணைந்த புகார் பயங்களை தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை இந்த ஒருங்கிணைந்த புகார் மையத்தில் தெரிவிக்கலாம் எனவும் என்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம். இகாப தெரிவித்துள்ளார்.

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts