ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் திருவடி சேவை நாளை நடக்கிறது

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த உற்சவம் வருகிற 25-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும். ஆனால், நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.
இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை, தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நாளை(புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைகிறார். இங்கு மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இங்கிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts