மயிலாடுதுறை, ஸ்ரீவடபத்திரகாளி அம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா


மயிலாடுதுறை, கூறைநாடு செம்மங்குளம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீவடபத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவுற்று 48 நாட்கள் தினசரி வழிபாடுகள் முடிந்த நிலையில் மண்டலாபிஷேபூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம் இதர பரிகார ஹோமங்கள் விவசாயம் செல்வம் கொழித்து மக்கள் மகிழ்ச்சியாக நோயற்ற வாழ்வுக்கான வேண்டுதலோடு கூடிய ஹோமங்கள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு மந்திர கேள்விகள் முழங்க நிறைவுற்றது. இதை தொடர்ந்து வடபத்ரகாளியம்மன் மற்றும் அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளை ஸ்ரீ வடபத்திர காளியம்மன் அறங்காவலர்கள் #ராஜி, ஹரிஹரன், பாலமுருகன், காயத்ரி, பிரபாகரன், சரஸ்வதி, காளிதாஸ் குடும்பத்தினர் செய்திருந்தார்கள். சமூகஆர்வலர் அஅப்பர்சுந்தரம் மற்றும் அப்பகுதி பக்தர்கள் பெருந்திரளாக ஆண்கள் பெண்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.