18th October 2021

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி..! நாளை அனைத்துக்கட்சி கூட்டம்..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரிய வழக்கு குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

அந்த மனு இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் இடைக்கால மனு நேற்றுமுன்தினம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம் என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான விரிவான பிரமான பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page