கும்பகோணம் இளைஞரின் அசத்தல் முயற்சி! ட்ரோன் மூலம் பயிர்களுக்கு உரம் தெளிப்பு!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இளைஞர் ஒருவர் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் உரம் தெளித்து அசத்தல் முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

கடிச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற பொறியியல் பட்டதாரி வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். நிறைவான சம்பளம் கிடைத்ததும் சொந்த ஊருக்கு வர வேண்டும் என திட்டமிட்டு அங்கு பணியாற்றி வந்தார்.

அதன்படி வெளிநாட்டில் இருந்து திரும்பி சொந்த ஊரில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது விவசாய பணிகளுக்கு குறித்த நேரத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை என்பதாலும், அதிக நேரம் எடுக்கிறது என்ற காரணத்தாலும் அவர் முதல் முயற்சியாக தனது வயலில் ட்ரோன் மூலம் உரம் தெளித்துள்ளார்.

வெளிநாடுகளில் ட்ரோன் மூலம் விவசாய நிலங்களில் உரம் தெளிப்பது வழக்கத்தில் இருக்கிறது என்றும், ஆனால் தமிழகத்தில் அதுகுறித்து தெரியாமல் இருக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதற்காக ரூ.4.5 லட்சம் செலவில் அவரே ட்ரோனை உருவாக்கியுள்ளார். ட்ரோன் மேல் இருக்கும் கேன்களில் திரவ உரங்களை ஊற்றி, ரிமோட் மூலம் இயக்கி தெளிக்கலாம் என வெங்கட்ராமன் கூறியுள்ளார். ஆண்ட்ராய்டு செல்போன் மூலமும் இதனை இயக்க முடியும்.

பொதுவாக ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றும், ஆனால் ட்ரோன் மூலம் 15 நிமிடங்களில் தெளித்துவிட முடியும் என்கிறார் இந்த இளைஞர். ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும், செலவை குறைப்பதற்கும் ட்ரோன் சிறந்த மாற்று என அவர் தெரிவித்துள்ளார்.

Source: News TM

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page