28th February 2021

தற்காப்புக் கலை உதவியால் கொள்ளையை தடுத்த மாணவன்… குவியும் பாராட்டு!

சென்னையில் கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தி முனையில் ஒரு லட்ச ரூபாய் இருந்த பணப்பையை பறித்துச் சென்றவர்களை, தான் கற்ற தற்காப்பு கலை உதவியுடன் கல்லூரி மாணவன் பிடித்த சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சங்கர் – கலைவாணி தம்பதியரின் மகனான கார்த்திக்குமார் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வருகிறார். குத்துச் சண்டை கற்றிருந்த தனது தந்தையைப் போலவே தானும் குத்துச் சண்டை பயிற்சி பெற்று, எதிர்காலத்தில் காவல் துறையில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளார்.

செவ்வாயன்று மாலை இவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் கையில் குழந்தையுடன் கூச்சலிட்டபடியே ஒரு பெண் ஓடி வருவதை பார்த்த இளைஞர் கார்த்திக்குமார், எதிர்முனையில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் கைப்பையை பறித்து வருவதை கவனித்தார். சாலையில் பொதுமக்கள், வியாபாரிகள் பலரும் நின்றிருக்க சமயோசிதமாக கார்த்திக்குமார் தனது வாகனத்தை கொண்டு எதிரில் சென்று கொள்ளையர்கள் மீது மோதி கீழே தள்ளினார்.

எழுந்து தப்பியோடிய கொள்ளையர்களில் ஒருவனை பின்னிருந்து பிடிக்க, இருவரும் கத்தியை எடுத்துள்ளனர். கார்த்திக் தற்காப்பு சண்டை பயிற்சி பெற்றவர் என்பதால் அதில் ஒருவனை, கத்தியை நீட்டுவதற்குள் தாக்கி கீழே தள்ள, மற்றொருவன் தப்பியோடியுள்ளான். அதற்கு பிறகு கீழே விழுந்த கொள்ளையனை அருகில் இருந்தவர்கள் ஓடி பிடித்தனர். அவனிடம் இருந்த பணப்பையை மீட்ட கார்த்திக், அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற ஒரு லட்ச ரூபாய் பணம் பறிபோக இருந்ததை தடுத்து மீட்டுக் கொடுத்ததற்கு அந்த பெண் உருக்கமுடன் நன்றி தெரிவித்து சென்றார்.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட கொள்ளையன், சைதாப்பேட்டையை சேர்ந்த முக்தார் உசேன் என்பதும், தப்பியோடியவன் ஹாலித் என்பதும் தெரியவந்தது. முக்தார் உசேன் மீது வேளச்சேரி காவல் நிலைய பகுதிகளில் மூன்று வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவனை வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கத்தியுடன் இருந்த கொள்ளையர்களை தைரியமாக எதிர்கொண்டு பிடித்ததுடன், வழிப்பறி செய்த ஒரு லட்சம் பணத்தையும் மீட்டு தந்த கல்லூரி மாணவன் கார்த்திக்குமாரை அப்பகுதியினரும், காவல் துறையினரும் பாராட்டியுள்ளனர்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts