14th April 2021

சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்கவேண்டும்

ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்தார்.அதேபோல, தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43,243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.இதனை கேட்ட நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, இந்த மனு தொடர்பாக ஜூலை 20 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply