மயிலாடுதுறை தரங்கை சாலையில் திடீர் பள்ளம்!


மயிலாடுதுறை கொத்தத்தெரு அருகே மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்டிருந்த பள்ளத்தால் கடந்த ஒரு மாத காலமாக அந்த வழியே செல்லும் வாகனங்களை வேறு பாதை வழியாக மாற்றி விடப்பட்டிருந்தது. அந்த பள்ளம் சரிசெய்யப்பட்டு சாலை பயன்பாட்டுக்கு வந்த ஒரே நாளில் கொத்தத்தெரு அருகே மீண்டும் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மக்கள் மட்டுமல்லாது அவ்வழியே செல்லும் அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.