நடிப்பிசைப் புலவர் கே ஆர் இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க தொழில் துறை அமைச்சரிடம் மனு

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே ஆர் இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற திமுக உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து மனு அளித்தனர்.

நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து பூட்டப்பட்டு கிடக்கும் நடிப்பிசைப் புலவர் கே ஆர் இராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பது குறித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகை போன்ற மாவட்டத்திற்கு என உள்ள ஒரே ஓர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்றுதான். 1987-இல் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரால் திறக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 1500 டன் பிழி திறனுடன் தெற்காசியாவிலேயே லாபகரமாக இயங்கிய சர்க்கரை ஆலை என பரிசு பெற்ற சர்க்கரை ஆலையாகும். கடந்த 30 ஆண்டுகளில் சிறுகச்சிறுக அதிகாரிகளின் அலட்சியத்தால் தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையை நலிவடைய செய்துவிட்டனர்.

2017 ஆம் ஆண்டிலிருந்து எடப்பாடி அரசு திட்டமிட்டு இந்த சர்க்கரை ஆலையை மூடி விட்டது. இந்த சர்க்கரை ஆலையை நம்பி கரும்பு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சர்க்கரை ஆலையை நம்பி பிழைத்து வந்த தொழிலாளர்கள் என 2 லட்சம் பேர் இன்றைக்கு பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். 700 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த இந்த ஆலையில், இன்றைக்கு 100 நபர்கள் கூட வேலை செய்ய முடியாமல் தவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்பளம் கிடைக்காமலும், ஓய்வு பெற்ற கூர்க்கா க்களும்( நேபால் காவலர்கள்) கூட பணப் பலன் கிடைக்காமல் சொந்த ஊருக்கும் போக முடியாமல் உணவிற்கே கஷ்டப்பட்டு வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக கரும்பு நிலுவைத் தொகையை பாக்கியை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். கடந்த அதிமுக அரசு இந்த ஆலையை தனியாரிடம் தாரை வார்க்கும் வேலையை பார்த்து வந்தது. விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தால் தனியாருக்கு விற்கப்படாமல் செயல்பாடற்று கிடைக்கிறது. ஆகவே இந்த ஆலையை உடனடியாக திராவிட முன்னேற்ற கழக அரசு திறந்து கரும்பு விவசாயத்தை மீண்டும் செய்வதற்கும், விடுபட்டு போன நிலுவைத் தொகையை பெறுவதற்கும், சம்பளம் இல்லாமல் பரிதவித்து நலிவுற்று கிடக்கும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நலன் கருதி வாழ்வில் ஒளியேற்றும் இந்த ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டனர்.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page