26th October 2021

தற்கொலைக்கு முயன்ற நபரால் தஞ்சை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

தஞ்சாவூர் மாவட்டம் ஆனைவிழுந்தான் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து மணிகண்டனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மணிகண்டன் கூறியதாவது; நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி செய்து வந்தேன். அப்போது என் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்து பணியிலிருந்து நீக்கி விட்டனர்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்த எனக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அல்லது வேலை வாங்கி தர வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக மணிகண்டன் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பையும் மீறி மணிகண்டன் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினர். அதன்பின் மணிகண்டனை போலீசார் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page