22nd October 2021

ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களை, வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை: ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் 2ம் தேதி ஓட்டு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையில், கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், முகவர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஓட்டு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஓட்டுச்சாவடிகளில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்து கொள்ளட்டும் என நம் வேட்பாளர்கள் இருக்கக்கூடாது. ஏற்னவே நடந்த லோக்சபா தேர்தலில், மதுரை தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்துவிடக்கூடாது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களை ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை கண்ணும் கருத்துமாக பார்ப்பது நமது கடமை. வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும்24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்து பாதுகாத்திட வேண்டும். போலீசாரின் பணி என நினைத்து கட்சி வேட்பாளர்கள், தோழர்கள் கவனக்குறைவாக இருக்காமல் ஓட்டுப்பதிவிற்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

Source:

https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/ottu+ennum+maiyangalil+kankanippu+talaivarkal+valiyuruthal-newsid-n268893026

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page