சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரிப்பெட்டி கண்டுபிடிப்பு : திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமா சங்கர் சாதனை படைத்துள்ளார். இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இள வயது கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாணவி கூறியாதவது :

எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல்களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தார். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆர்வம் எனக்கு நாள்தோறும் அதிகரித்தது. தற்போது நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தபட்டிருக்கும். இவை 100 ஏ.எ ச். திறன் கொண்ட மின்கலனுடம் இணைக்கபட்டிருக்கும்.

இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணி நேரம் வரை தொடர்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்ப்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது. இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளர்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனர் . இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்துவிடும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக இவர், தானாகவே இயங்கும் வகையில் அறிதிறன் மின் விசிறியை கண்டறிந்தார்.
விருதுகள் :

வினிஷா கடந்த ஆண்டு, டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இக்னைட் விருது பெற்றார். அதே ஆண்டு, சிறந்த பெண் கண்டுபிடிப்பாளர் பிரிவில் டாக்டர் பிரதீப் பி தேவனூர் கண்டுபிடிப்பாளர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, 18 வயதுக்குக் கீழ் உள்ள மாணவர்களின் பிரிவில் பிரதமரின் ராஷ்டிரீய பால் சக்தி புரஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் சூரியஒளி இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்புக்காக ஸ்வீடனின் துணை பிரதமர் இசபெல்லா லோவின் புதன்கிழமை ( Nov.18 ) கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில், பட்டயம், பதக்கம் குறிப்பாக ஸ்வீடன் நாட்டின் பண மதிப்பில் 100,000 (சுமார் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரம் ) வழங்கப்படுகிறது. இந்த பரிசு தொகையை தனது வருங்கால கண்டுபிடிப்புகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக வினிஷா உமாசங்கர் தெரிவித்தார்.

More News

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts